விளையாட்டு

‘Future is Here’ : Khelo India விளையாட்டுப் போட்டிகள் - 2023 குறித்த காலப்பேழை புத்தகம் வெளியீடு !

Khelo India விளையாட்டுப் போட்டி - 2023 குறித்து விளக்கும் வகையில் ‘Future is Here- Khelo India Youth Games -2023’ என்ற காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

‘Future is Here’ : Khelo India விளையாட்டுப் போட்டிகள் - 2023 குறித்த காலப்பேழை புத்தகம் வெளியீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.8.2024) தலைமைச் செயலகத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 குறித்து விளக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட “Future is Here – Khelo India Youth Games 2023” என்ற காலப்பேழை புத்தகத்தை (Coffee Table Book) வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் 2023-ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 19.01.2024 முதல் 31.01.2024 வரை சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.

‘Future is Here’ : Khelo India விளையாட்டுப் போட்டிகள் - 2023 குறித்த காலப்பேழை புத்தகம் வெளியீடு !

இப்போட்டிகளில், 31 மாநிலங்களிலிருந்து (யூனியன் பிரதேசம் உட்பட) 2,875 ஆண்கள் மற்றும் 2,755 பெண்கள், என மொத்தம் 5,630 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து 570 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 26 போட்டிகளில் கலந்துகொண்டு 38 தங்கப் பதக்கம், 21 வெள்ளிப் பதக்கம், 39 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 98 பதக்கங்களை பெற்று தேசிய அளவில் இரண்டாமிடத்தை தமிழ்நாடு அணி பெற்றுள்ளது.

1,020 விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள், 1,331 அணி மேலாளர்கள், 480 விளையாட்டு தன்னார்வலர்கள் மற்றும் 1,450 தன்னார்வலர்கள் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர்.

‘Future is Here’ : Khelo India விளையாட்டுப் போட்டிகள் - 2023 குறித்த காலப்பேழை புத்தகம் வெளியீடு !

அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உயர் அலுவலர்கள் மற்றும் விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு, தரமான உணவுகள் வழங்கப்பட்டன. கேலோ இந்தியா போட்டிகளின் தொடக்க விழா இந்தியப் பிரதமர் அவர்களால் சென்னையில் 19.01.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இத்தொடக்க விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போதைய ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடத்தப்பட்டு 31.01.2024 அன்று முடிக்கப்பட்டது.

‘Future is Here’ : Khelo India விளையாட்டுப் போட்டிகள் - 2023 குறித்த காலப்பேழை புத்தகம் வெளியீடு !

இந்த நிலையில், இப்போட்டிகளை விளக்கும் வகையில் “Future is Here – Khelo India Youth Games 2023” என்ற காலப்பேழை புத்தகம் (Coffee Table Book) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த காலப்பேழை புத்தகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (ஆக22) வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories