தமிழ்நாடு

”மழை போல் பொழியும் முதலீடுகள் - உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

முதலீடுகளின் மையம் தமிழ்நாடு என சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”மழை போல் பொழியும் முதலீடுகள் - உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் ரூ.9.74 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதலமைச்சரின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தொழில் துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் அவர்கள் மொத்தம் 1,06,803 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் ரூ.17,616 கோடி முதலீட்டிலான 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டிலான 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து முதலீடுகளின் மையம் தமிழ்நாடு என சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”மழை போல் பொழியும் முதலீடுகள் நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஊந்துசக்தியாக உள்ளது. திராவிட மாடல் அரசின் கீழ் உலகளாவிய முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories