தமிழ்நாடு

"உங்களுக்கு என்றும் துணை நிற்போம்"- முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுசெயலாளரிடம் முதலமைச்சர் உறுதி !

உங்களுக்கு என்றும் துணை நிற்போம் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளதாக அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுசெயலாளர் பேட்டி.

"உங்களுக்கு என்றும் துணை நிற்போம்"- முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுசெயலாளரிடம் முதலமைச்சர் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வஃக்பு வாரிய திருத்த சட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் மௌலானா பஃஸ்லூர் ரஹிம் முஜாதிதி ஆகியோர் கூட்டாக சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய தனியார் முஸ்லீம் சட்ட வாரிய பொதுசெயலாளர் பஸ்லூர் ரஹீம் முஜாதிதி, "சமீபத்தில் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு திமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சோபனை தெரிவித்தது.

"உங்களுக்கு என்றும் துணை நிற்போம்"- முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுசெயலாளரிடம் முதலமைச்சர் உறுதி !

அதனைத் தொடர்ந்து அந்த மசோதா தற்பொழுது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. வஃக்பு வாரிய திருத்த சட்டத்தை முஸ்லிம் சமூகம் ஏன் எதிர்க்கிறது, பொது பொது சிவில் சட்டம் அரசாங்கத்திற்கு எந்த வகையில் விரோதமாக உள்ளது என்பது குறித்தும் முதல்வரிடம் விவரித்தோம்.

எங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர் வஃக்பு வாரிய திருத்த சட்டத்திற்கும், பொது சிவில் சட்டத்தையும் எதிர்ப்பதாக கூறினார். மேலும், என்றும் உங்களுக்கு துணை நிற்போம் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories