78 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
பின்னர் முதலமைச்சர் மு.ஸ்டாலின் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். முன்னதாக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும் திகழும் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். இதையடுத்து, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது சந்திராயன் -3 விண்கல திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேலுக்கும்,கல்பனா சாவ்லா விருது செவிலியர் சபீனாவுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று 4 ஆவது முறையாக மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய்க் கொடியை ஏற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.