தமிழ்நாடு

முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் : ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட NIRF தரவரிசை பட்டியல்!

சென்னை ஐ.ஐ.டி, தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடம் பெற்று, தனி சாதனையையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் : ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட NIRF தரவரிசை பட்டியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய கல்வி அமைச்சகம், 2024ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலை (NIRF) வெளியிட்டுள்ளது.

அதில், முதல் 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. சென்னை ஐ.ஐ.டி, இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. இதன்வழி, தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடம் பெற்று, தனி சாதனையையும் உருவாக்கியுள்ளது சென்னை ஐ.ஐ.டி.

தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில், ஒவ்வொரு ஆண்டும் தேசியத்தில் முதலிடம் வகிக்கும் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில், தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்வதும் குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

மேலும், உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலிலும் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

முதல் 50 அரசு பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழ்நாடு அரசின், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், ஆகிய 10 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. கோவையின் PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7ஆவது இடமும், சென்னை லயோலா கல்லூரி 8ஆவது இடமும், கோவை PSG கல்லூரி 11ஆவது இடமும், சென்னை Presidency கல்லூரி 13ஆவது இடமும், சென்னை கிறித்தவக் கல்லூரி 14ஆவது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories