தமிழ்நாடு

“இப்படியெல்லாம் கூறுபவர்கள் கருத்து குருடர்கள் என்றுதான் கருத வேண்டும்” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !

மனசாட்சியோடு முதலமைச்சரின் தமிழ் புதல்வன் திட்டத்தை வானதி சீனிவாசன் வாழ்த்தியதை அமைச்சர் சேகர்பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

“இப்படியெல்லாம் கூறுபவர்கள் கருத்து குருடர்கள் என்றுதான் கருத வேண்டும்” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை பாரிமுனை பிராகசம் சாலையில் ரூ.78.98 செலவில் பழைய மழை நீர் வடிகால்வாய் பழுது பார்த்து புதுப்பிக்கும் பணியையும், தேவி தியேட்டர் பின்புறம் உள்ள பங்காரு நாயக்கன் தெரு, பாலமுத்து தெரு, அண்ணாசாமி தெரு ஆகிய தெருக்களை இணைக்கும் புதிய மழைநீர் கால்வாய் ரூ.31 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கும் பணியையும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

முன்னதாக வால் டக்ஸ் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்த இடத்தையும், பாரதி மகளிர் அரசு கலைக் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

“இப்படியெல்லாம் கூறுபவர்கள் கருத்து குருடர்கள் என்றுதான் கருத வேண்டும்” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, "வரும் 16-ஆம் தேதி பாரதி கலைக் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அந்த கட்டிடத்திற்கு முதல்வர் அனுமதி பெற்று கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடம் என்று பெயரிடப்பட உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வடசென்னையை வாடாத சென்னை ஆக்க முயற்சிக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் கரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை சென்னை மாநகராட்சி யோடு இணைந்து நிறைவேற்றி வருகிறோம்...

முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கூறிய வார்த்தை வாக்களித்தவர்கள் இவருக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி அடைவார்கள் வாக்களிக்காதவர்கள் அரசின் சார்பில் செயல்படக்கூடிய திட்டங்களை பார்த்து ஏன் இவர்களுக்கு வாக்களிக்க தவறவிட்டோமோ என்று வருத்தப்படுவார்கள் என்று கூறி இருந்தார்...

மற்றாரும் புகழக்கூடிய அளவிற்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவரும் பொழுது மக்கள் முன்னால் அதற்கு மாற்றுக்கருத்து கூறினால் எடுபடாது என்ற நிலையில் மனசாட்சியோடு முதலமைச்சர் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை வானதி சீனிவாசன் வாழ்த்தியதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தந்து அந்தத் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைகிற ஒரு நல்ல சூழலை உருவாக்க வேண்டும்.

“இப்படியெல்லாம் கூறுபவர்கள் கருத்து குருடர்கள் என்றுதான் கருத வேண்டும்” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு !

வாழ்ந்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகளை அமைப்பதும், ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற நிகழ்ச்சிகள் எப்படி மக்களுக்கு தேவையற்ற நிகழ்ச்சி என்று கருதமுடியும். இந்த தேசத்தையும் மாநிலத்தையும் உயர்த்தி பிடிப்பதற்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்தவர்களுக்கு சிலை அமைப்பதை கூட தவறு என்று கருதுபவர்கள் கருத்து குருடர்கள் தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடினமான உழைப்பு, கடின பணிச்சுமையில் ஈடுபடும் மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரு பொழுதுபோக்கு அம்சம் தேவை. உலக அளவில் விளையாட்டுகளை உயர்த்தி பிடிக்கும் சூழல் இருக்கிறது. ஒலிம்பிக் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அனைத்து துறைகளிலும் அனுபவம் வாய்ந்த முன்னணியில் இருக்கக்கூடிய சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்றால் இது போன்ற கார்பந்தயங்கள் நடக்கத்தான் வேண்டும்.

முடியாதவர்கள் இது போன்ற குறைகளை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள், இது நினைத்ததை நடத்தி முடிக்கின்ற ஆட்சி, இது போன்ற பணிகள் எங்கள் ஆட்சியில் தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்றார்.

banner

Related Stories

Related Stories