தமிழ்நாடு

முதலமைச்சருக்கு நன்றி சொன்ன பா.ஜ.க MLA வானதி சீனிவாசன் : காரணம் என்ன?

கோவை அரசு கலைக் கல்லூரிக்கு புதிய விடுதி கட்டித்தரப்படும் என அறிவித்ததை அடுத்து முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு நன்றி சொன்ன பா.ஜ.க MLA வானதி சீனிவாசன் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவியருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைப் போல, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவர்க்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (Debit Card) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் இந்த விழாவில், கோவை அரசு கலைக் கல்லூரி 173 ஆண்டுகள் பழமை வாய்ந்தது! இந்தக் கல்லூரியில், 6,500 மாணவ மாணவிகள் படிக்கின்றார்கள். இந்தக் கல்லூரி முதல்வர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

அதாவது, இந்தக் கல்லூரிக்கு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிக் கட்டடம், பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் நடத்த ஏதுவாக ஒரு கருத்தரங்கக் கூடம் கட்டித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அவரின் கோரிக்கையை ஏற்று, கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதிக் கட்டடமும், கருத்தரங்கக் கூடமும் கட்டித் தரப்படும் ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதிக் கட்டடமும், கருத்தரங்கக் கூடமும் கட்டித்தரப்படும் என்று அறிவித்ததை அடுத்து, விழாவில் கலந்து கொண்டு பா.ஜ.க MLA வானதி சீனிவாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories