தமிழ்நாடு

”இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சிதைக்கும் ரயில்வே தேர்வு வாரியம்”: மக்களவையில் கலாநிதி வீராசாமி குற்றச்சாட்டு

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சிதைக்கும் வகையில் ரயில்வே தேர்வு வாரியம் புதிய விதியை கொண்டுள்ளதாக கலாநிதி வீராசாமி எம்.பி தெரிவித்துள்ளார்.

”இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சிதைக்கும் ரயில்வே தேர்வு வாரியம்”: மக்களவையில் கலாநிதி வீராசாமி குற்றச்சாட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஜூலை 23 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம், முடிந்ததை அடுத்து துறைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேரமில்லா நேரத்தில் பேசிய வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ”ரயில்வே தேர்வு வாரியம் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஒரு புதிய விதியை அறிவித்துள்ளது. இது அரசியல் சட்டம் வகுத்துள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த புதிய விதியின்படி, பட்டியல் இனத்தவரும், பட்டியல் மலைவாழ் மக்களும், ஓ.பி.சி எனப்படும் பிற்படுத்தப்பட்டவர்களும், ரயில்வே துறைக்குப் பணியாளர்கள் தேர்வு தொடுக்கும்போது, பொதுபட்டியல் மற்றும் யாருக்கும் ஒதுக்கப்படாத பணி இடங்களுக்கான பட்டியலின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள பணியிடங்களுக்குப் போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் கூட இத்தகைய புது விதியை, ரயில்வே தேர்வு வாரிய அதிகாரிகள் கொண்டுவர முயற்சி செய்தனர். அப்போது இது குறித்து அன்றைய ரயில்வே துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முறையிடப்பட்டதால் இந்த புதிய விதி திரும்பப் பெறப்பட்டது. தற்போது, முடிவுற்று, மீண்டும் அரசு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விதியை மீண்டும் அமல்படுத்த ரயில்வே தேர்வு வாரிய அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.

ஏனவே, இதனை நான் மீண்டும் தற்போதைய ரயில்வே அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். ரயில்வே அமைச்சர் அவர்கள், இவ் விதியைத் திரும்பப் பெற தக்க ஆணை வெளியிடக் கோருன்றேன். புதிதாக, ரயில்வே தேர்வு வாரியம் கொண்டுவர முயற்சிக்கும் இந்த விதியின் படி இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் தேர்வுக்கு இட ஒதுக்கிட்டு கொள்கையின் படி பட்டியல் பிரிவு, பட்டியல் மலைவாழ் மக்கள் பிரிவு, மற்றும் ஓ.பி.சி (மிக பிற்படுத்தப்பட்டவர்கள்) பிரிவில் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்ட தேர்வுகளுக்கு அந்தந்த பிரிவிலுள்ள காலி இடங்களுக்கான பணியிடங்களுக்கு மட்டுமே போட்டியிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் பட்டியல் இன மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினை சேர்ந்தவர்களும், பொது பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள பணி இடங்களுக்கு போட்டியிடாத இயலாத நிலை உண்டாகிறது எனவே சட்ட விதியை திரும்ப பெறுவதுடன் இந்த விதியை புகுத்த விரும்பும் ரயில்வே தேர்வு வாரிய அதிகாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories