தமிழ்நாடு

பட்டியலின வாலிபர் மீது கொடூர தாக்குதல்... பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் !

காங்கேயத்தில் இருசக்கர வாகனம் வாங்கியதற்கான மாத தவணை கட்டாததால் பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர் மீது போலீசில் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின வாலிபர் மீது கொடூர தாக்குதல்... பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கேயம் - கோவை ரோட்டில் ஸ்ரீ அருள் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வரும், பாஜக தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளராக உள்ள சதீஷ் குமார், என்பவரிடம் மாதத் தவணையில் பழைய இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளார்.

பாஜக நிர்வாகி சதீஷ்
பாஜக நிர்வாகி சதீஷ்

அதற்கு மாதம் ரூ.2,400 வீதம் கட்ட வேண்டும். ஆனால் இவர் கடந்த 4 மாத தவணையை கட்டாமல் இருந்துள்ளார். இதனால் பாஜக நிர்வாகி சதீஷ் குமார், சங்கரை இன்று தனது ஊழியர்கள் மூலம் வரவழைத்து அலுவலகத்தில் வைத்து ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான வாலிபர் சங்கர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்டியலின வாலிபர் மீது கொடூர தாக்குதல்... பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் !
பாதிக்கப்பட்ட சங்கர்

இந்நிலையில் சங்கர் தன்னை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி சதீஷ் குமாரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார், காங்கேயம் பாஜக தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சதீஸ்குமார் மீது 115 (2), 127 BNS, SC/ST வன்கொடுமை வழக்கில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக நிர்வாகியால் தாக்குதலுக்கு ஆளான சங்கர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்த படி தாக்குதல் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories