தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்ததில் இருந்தே பாஜகவினர் தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். பாஜகவினரின் பொய்யை அரசும், மக்களும் தவிடுபிடியாக்கி வருகின்றனர். இதுபோல் வதந்தி பரப்பி வரும் பாஜகவினர் பலரும் போலீசார் கைது செய்யப்படும் வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாஜக கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக கட்சியின் தேசிய துணைத் தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
மேலும் பாஜக-வின் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கபிலன் பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறு கருத்துகளையும், அருவருப்பான கருத்துகளையும் தெரிவித்தார்.
இந்த சூழலில் இதற்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார், வியாசர்பாடி பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கபிலனை கைது செய்தனர். கபிலன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.