தமிழ்நாடு

சென்னை கடற்கரை- பல்லாவரம் சிறப்பு ரயில்கள் : MTC சார்பில் சிறப்பு பேருந்துகள்... முழு விவரம் என்ன ?

சென்னை கடற்கரை- பல்லாவரம் சிறப்பு ரயில்கள் : MTC சார்பில் சிறப்பு பேருந்துகள்... முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 23-ம் தேதி முதல் தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களும் காலை 9.20 மணி முதல் மதியம் 1 30 மணி வரையிலும், இரவு 10 30 மணி முதல் அதிகாலை 2 45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது, இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்....

அந்த இரு தினங்களும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை ஏற்கனவே அறிவித்தது போலவே காலை 9.20 மணி முதல் மதியம் 1 30 மணி வரையிலும், இரவு 10 30 மணி முதல் அதிகாலை 2 45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது..

மேலும் கூடுதலாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9, 9.22, 9.40, 9.50 மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம் 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை- பல்லாவரம் சிறப்பு ரயில்கள் : MTC சார்பில் சிறப்பு பேருந்துகள்... முழு விவரம் என்ன ?

அந்த வகையில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, மதியம் 12, 12.15, 12.30, 12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்பட உள்ளது...

இதேபோல் பல்லாவரத்தில் இருந்து காலை 10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். அதேநேரம் செங்கல்பட்டு-கூடுவாஞ்சோி, கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நேரத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி சென்னை மாநகர போக்குவரத்து துறை சார்பில் இன்று முதல் ஆகஸ்ட் 14 வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகா் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

banner

Related Stories

Related Stories