தமிழ்நாடு

”தமிழ்நாட்டின் போராட்டம் ஒன்றிய அரசை ஆட்டம் காண வைக்கும்” : கனிமொழி MP அதிரடி பேச்சு!

தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

”தமிழ்நாட்டின் போராட்டம் ஒன்றிய அரசை ஆட்டம் காண வைக்கும்” : கனிமொழி MP அதிரடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தயாநிதி மாறன் எம்.பி “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மக்களின் கவலைகள், வலிகள் பற்றி தெரியாது; ஏன் என்றால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்” என பேசினார்.

அதேபோல் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி, "பாஜகவுக்கு ஒரு இடம் கொடுக்காத தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது. எங்களது நிதியை தாருங்கள் என்று கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் அது நமது உரிமை. நாம் கேட்கும் உரிமைகளை தொடர்ந்து மறுத்து வருகிறது” கூறினார்.

வில்சன் எம்.பி,“மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரிப் பகிர்வை ஒன்றிய அரசு முறையாக வழங்க வேண்டும் என்பது அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்ட ஒரு உரிமையாகும். ஆனால் ஒன்றிய அரசு அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் 22.7 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். ஆனால் 6.42 லட்சம் கோடி மட்டுமே அந்த மாநிலங்களுக்கு திருப்பிக்கொடுத்துள்ளார்கள். இதுபோன்ற ஒரு பட்ஜெட் நாட்டிற்கு தேவையா?” என கேள்வி எழுப்பினார்.

அதேபோல் தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிம்மொழி எம்.பி,"தமிழ்நாட்டில் தற்போது பற்றிய தீ, ஒன்றிய அரசின் அடித்தளத்தை அசைக்கும். தமிழ்நாட்டை தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களை நிராகரித்து உள்ளார்கள். வெள்ளம் பாதித்தபோது, தூத்துக்குடி வந்து பார்வையிட்டு போனவங்க போனதுதான். இன்னும் நிதி வரவில்லை, தமிழ்நாட்டை பற்றியும் ஒன்றிய அரசு சிந்திக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories