தமிழ்நாடு

வன்மத்தை கக்கும் பட்ஜெட் : பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து வெகுண்டெழுந்த தமிழ்நாடு!

தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்மத்தை கக்கும் பட்ஜெட் : பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து வெகுண்டெழுந்த தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

மேலும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி என அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து முழக்கங்களை தி.மு.கவினர் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories