தமிழ்நாடு

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை... அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்.. மக்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை... அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்.. மக்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழக்கம்போல் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். சென்னை கிண்டியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டபோது, வழியில் பேப்பர் எடுத்து பிழைக்கும் தொழில் செய்யும் நபர் ஒருவர் வணக்கம் வைத்தார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பதிலுக்கு வணக்கம் வைத்து, அவரிடம் யார் என்று விசாரித்தார்.

அப்போது அந்த நபர் திருச்சியை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் ராஜா என்றும் கூறினார். மேலும் தான் தெருவோரம் பேப்பர் எடுத்து பிழைப்பதாகவும் தெரிவித்தார். அதோடு தனது நிலைமையை குறித்து விளக்கினார். இதையடுத்து அவரை உடனே தனது வாகனத்திலேயே தனது இல்லத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைத்து சென்றார்.

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை... அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்.. மக்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

பின்னர் அந்த நபரை குளிக்க சொல்லி, உடை மற்றும் உணவு வழங்கி, அவரை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அதே மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.

சாலையில் பேப்பர் எடுத்து பிழைத்து வந்த ஒரு நபரின், நிலையை அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேலை வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories