தமிழ்நாடு

”உயர் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு” : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!

இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவதாக அமைச்சர் பொன்முடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

”உயர் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு” :  அமைச்சர் பொன்முடி  பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் வானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11 கோடியே 33 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய கட்டடத்தை திறந்து வைத்து விழா சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் ”மாணவர்கள் படிக்கும்போதே வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் பேச்சாற்றலையும் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்காகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ”நான் முதல்வன்” திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.இந்த திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்று பொது அறிவையும், கல்வித்தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 52% மாணவர்கள் உயர் கல்வி படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மட்டுமல்லாமல் கல்வி தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் நமது அரசும், முதலமைச்சரும் செயல்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories