தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை குறைகூறுவதில் குறையே இல்லாமல் செய்து வருகிறது அதிமுகவும், பாஜகவும். அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த நேரத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களுக்கு திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வந்தது. இப்போதும் யார் குற்றம்செய்தாலும், அரசு தன் கடமையை செய்வதில் இருந்து தவறியதில்லை.
எனினும் கூட்டணியை விட்டு விலகினாலும், அதிமுகவும், பாஜகவும் திமுக அரசின் சட்ட ஒழுங்கைப் பற்றி குறை கூறி வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், பாலியல் தொல்லை, கஞ்சா கடத்தல், ஆட்கடத்தல், கொலை வழக்கு, கொள்ளை சம்பவம் உள்ளிட்ட அனைத்து குற்றச் சம்பவங்களிலும் அதிமுக பாஜகவினர் தான் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு பாஜகவில் 124 ரௌடிகள் உள்ளதாக அண்மையில் காங்கிரஸ் தலைவர் செல்வேபெருந்தகை ஷாக் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதே வேளையில் அதிமுக பிரமுகர்களும் கொலை, கொள்ளை, கடத்தல் என பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அண்மையில் நிகழ்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்திலும் அதிமுக, பாஜக பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். இவ்வாறு இருக்க, சட்டம் ஒழுங்கை பற்றி அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும், அண்ணாமலையும் பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது.
மிகப்பெரிய பட்டியல் இல்லாமல் கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிமுக நிர்வாகிகள் 5 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு :
=> 20.06.2024 - புதுக்கோட்டை ஆர்.டி.ஓ மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற வழக்கில் அதிமுக நிர்வாகி சுந்தரம் கைது.
=> 24.06.2024 - கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் காய்ச்சிய வழக்கில் அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது.
=> 14.07.2024 - ஆள் கடத்தல் வழக்கில் திருவண்ணாமலை அதிமுக ஒன்றிய செயலாளர் சரவணனை போலிஸார் தேடி வருகின்றனர்.
=> 16.07.2024 - ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது.
=> 17.07.2024 - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக பகுதிக் கழக நிர்வாகி மலர்க்கொடி கைது.