தமிழ்நாடு

“பாமாயில், பருப்பு காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை” - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

நியாய விலை கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளை காலதாமதம் இன்றி வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

“பாமாயில், பருப்பு காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை” - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் 43 வது (நபார்டு) நிறுவன நாள் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் பெரியகருப்பன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் ஆனந்த், பொது மேலாளர் ஜோதி நிவாஸ், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் உமா சங்கர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அமைச்சர் நபார்டு வங்கி ஆண்டு திட்ட மலரை வெளியிட்டு சிறப்பாக பணியாற்றிய வங்கி ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார். இதைத்தொடர்ந்து மேடையில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது, "நபார்டு மூலமாக கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையிலும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுகிறது அதன்படி கிராமப்புற சாலைகள், பாலங்கள், ஏர்பாசன வசதிகள் பள்ளி மற்றும் கல்லூரியில் கட்டிடங்கள், பழங்குடியின மக்களுக்கான தங்கும் விடுதிகள், கால்நடை மருத்துவமனைகள் போன்ற திட்டங்களை நிறைவேற்ற நபார்டு வங்கி தமிழக அரசுக்கு இதுவரை ரூ.36,000 கோடி வழங்கியுள்ளது.

“பாமாயில், பருப்பு காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை” - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

தமிழகம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு 2020 - 30 ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி பெரும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குரிய தெளிவான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி பாதையில் அனைத்து துறைகளிலும், அனைத்து வழிகளிலும் தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து நபார்டு வங்கி செயல்பட வேண்டும் என்று இந்த நல்ல நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து வகையான உட்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், சென்னையில் நெரிசலை குறைப்பது தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையில் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இது தொடர்பாக இணைந்து பணியாற்றுவது குறித்த அனைத்து சாத்தியங்களையும் நபார்டு வங்கியினை நான் கேட்டுக்கொள்கிறேன்.

“பாமாயில், பருப்பு காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை” - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் எப் பி ஓ எஸ் வணிகம் மாதிரிகளை ஏற்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை நபார்டு வங்கி அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் இளைய தலைமுறைக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முனையும் வாய்ப்புகளை உருவாக்குகிறார். இந்த 42 ஆண்டு கால பயணத்தில் நபார்டு வங்கி கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மை துறை ஆகியவை பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

மாறிவரும் பொருளாதாரம் சூழல் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் விவசாயிகள் குறிப்பாக சிறு குரு விவசாயிகள் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் பாதிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு நபார்டு வங்கி தேவையான நிவாரணத்தை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் சாத்தியமான மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிய நபார்டு அனைத்து முயற்சிகளையும் முழுமையாக எடுக்கும் என நம்புகிறேன் " என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது, “கிராமப்புற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் நபார்டு வங்கி பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளை காலதாமதம் இன்றி வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி கடன் மற்றும் வரவு செலவு திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படும்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories