தமிழ்நாடு

கஞ்சா வேட்டை : வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக நிர்வாகி - அதிரடியாக கைது செய்த போலீஸ்!

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பா.ஜ.க வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா வேட்டை : வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக நிர்வாகி - அதிரடியாக கைது செய்த போலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை புளியந்தோப்பு உதவி ஆணையர் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பெரம்பூர் பி.என்.சி மில் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு நபர்கள் கையில் பையுடன் வேகமாக சென்றதை பார்த்த தனிப்படை போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை எடை போட்டு பார்த்தபோது 4 கிலோ வரை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்த 4 கிலோ கஞ்சா மற்றும் பிடிப்பட்ட இருவரையும் ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கஞ்சா வேட்டை : வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக நிர்வாகி - அதிரடியாக கைது செய்த போலீஸ்!

இதைத்தொடர்ந்து இது குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைதான நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பட்டாளம் டோபிகானா குடிசை பகுதியை சேர்ந்த விஜய் (26), ரகு (44) என்பது தெரியவந்தது. மேலும் சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன் (40) என்பவர் கஞ்சாவை கொடுத்து விற்க சொன்னது தெரியவந்தது.

கஞ்சா வேட்டை : வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக நிர்வாகி - அதிரடியாக கைது செய்த போலீஸ்!

இதையடுத்து பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா, எடை போடும் இயந்திரம் உள்ளிட்டவையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பாஜக நிர்வாகி குணசேகரனையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குணசேகரன் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து பின்னர் விஜய், ரகு இருவர் மூலம் சில்லறையில் கஞ்சாவை விற்று வந்தது தெரியவந்தது.‌ இதனை அடுத்து பாஜக நிர்வாகி குணசேகரன், விஜய், ரகு ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories