தமிழ்நாடு

#FactCheck : காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறு : அண்ணாமலைக்கு ஆதாரத்துடன் குவியும் கண்டனம் !

#FactCheck : காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறு : அண்ணாமலைக்கு ஆதாரத்துடன் குவியும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பள்ளிகளுக்கு குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை அப்போதைய முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்தார். இதில் மேலும் ஊட்டச்சத்து வேண்டும் என்பதற்காக முட்டை, வாழைப்பழம், இனிப்பு, பயறு போன்றவைகள் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் வழங்கப்பட்டது.

மதிய உணவுத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயன்பெறும் நிலையில், காலை உணவு பல மாணவர்கள் தவிர்த்தது விட்டே பள்ளிக்கு வருகின்றனர். இதனால் மாணவர்கள் நல்ல உணவு உண்டால்தான் கல்வியையும் கவனமாக கற்க முடியும் என்ற உன்னத நோக்கோடு, காலை உணவுத் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

#FactCheck : காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறு : அண்ணாமலைக்கு ஆதாரத்துடன் குவியும் கண்டனம் !

ஆரம்பத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், இதில் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு கடந்த 2023-ம் ஆண்டு இதன் அடுத்தக்கட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் மேலும் 18 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டவாறே, கடந்த ஜூலை 15 (காமராஜர் பிறந்தநாள்) அன்று தொடங்கி வைக்கப்பட்டு 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

மொத்தம் மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் இந்த அருமையான திட்டத்தை நாடே பாராட்டி வரும் நிலையில், அதனை பொறுத்துக்கொள்ளாமல் இதிலும் பாஜக அரசியல் செய்து வருகிறது.

#FactCheck : காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறு : அண்ணாமலைக்கு ஆதாரத்துடன் குவியும் கண்டனம் !

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, "வெறும் சாப்பாடு, இட்லி, தோசை இல்லை... முட்டை, சிறு தானியங்கள் என ஊட்டச்சத்து உணவுகளும் பள்ளிகளில் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில், இதுவரை காலை சிற்றுண்டியின் சிறுதானிய உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது; இட்லி, தோசை வழங்கப்படுவதில்லை.

அதுமட்டுமின்றி, மதிய உணவில் வாரத்தில் 5 நாட்களும் முட்டை கட்டயாமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய அரசு நிர்ணயித்த கலோரிகள், புரதத்தை விடவும் அதிகமாகவே தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் காலை மற்றும் சத்துணவு பட்டியல் (கீழே புகைப்படம்)

#FactCheck : காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறு : அண்ணாமலைக்கு ஆதாரத்துடன் குவியும் கண்டனம் !
#FactCheck : காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறு : அண்ணாமலைக்கு ஆதாரத்துடன் குவியும் கண்டனம் !

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தால்தான், நன்றாக பிடிக்க முடியும் என்ற ஒரு உன்னத நோக்கோடு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதுவரை திராவிட அரசுகள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்புகளுக்காக எவ்வளவோ செய்துள்ளது. இப்படி இருக்க, வழக்கம்போல் எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசியுள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலையின் பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. வேண்டுமென்றே பல விஷயங்ளைல் அரசின் மீது குறைகளை கூறி வரும் பாஜக, அண்ணாமலை தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவிலும் அரசியல் செய்து வருவது அனைவர் மத்தியிலும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories