தமிழ்நாடு

”தோல்வி பயத்தில் தேர்தலை புறக்கணித்த அதிமுக” : விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்!

விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

”தோல்வி பயத்தில் தேர்தலை புறக்கணித்த அதிமுக” : விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) சிவசண்முகம் அவர்களை ஆதரித்து தும்பூர் பகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 8 கோடி முறை இந்த வீடியல் பயணத்தில் பயணம் செய்து உள்ளீர்கள். புதுமைப்பெண் திட்டம் மூலமாக 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவிகள் மாத மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் பெற்று வருகின்றனர் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். அதேபோல் காலை உணவு திட்டம் மூலமாக 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இந்த விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 66,000 மாணவர்கள் தினமும் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயன்ப பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

தொடர் தோல்வியாலும், பா.ஜ.க மீது ஏற்பட்டுள்ள பயத்தாலுமே விக்கிரவாண்டி தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்துள்ளது. மக்கள் மீதே எடப்படி பழனிசாமிக்கு தற்போது பயம் வந்துவிட்டது. 7 வருடத்திற்கு முன்பே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல் முதலில் குரல் கொடுத்தது நமது கழகமும், நமது முதலமைச்சரும்தான். நீட் தேர்வை ரத்து செய்யமாட்டேன் என அடம்பிடிக்கும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ம.கவுக்கு இந்த தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்.

விக்கிரவாண்டி ஊராட்சியில் 18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முண்டியம்பாக்கம் முதல் கோசபாளையம் வரை ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை உயர் மட்ட பாலப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதனுர் வாய்க்காலை தூர்வாரி முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் விரைவில் சரி செய்யப்படும். மூன்று கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கானை வட்டார வளர்ச்சி அலுவலகப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

3 ஆண்டுகளில் நம் முதலமைச்சர் செய்துகாட்டியை சாதனை மனதில் வைத்து ன்னியூர் சிவா அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories