நீலகிரி மாவட்டத்தில் கோடை காலங்களில் மெட்ராஸ் ரேஸ் கிளப் மூலம் குதிரை பந்தையம் நடைபெறும். உதகையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தையம் நடத்தி வருகிறது.
இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரைகளும் போட்டிகளில் பங்கேற்கும். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மெட்ராஸ் ரேஸ் கிளப் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ. 822 கோடியை செலுத்தாமல் இருந்தது.
இதையடுத்து இதுசம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள உத்தரவிட்டது. . இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உதகை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் வருவாய் துறையினர் 52.34 ஏக்கர் நிலத்தை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.