தமிழ்நாடு

“மகளிர் தொழில் முனைவோர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு TN - RISE திட்டம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

TN - RISE திட்ட மூலம் ஆண்டுதோறும் 100 மகளிர் தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் தொழில் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பயனடைய உள்ளனர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

“மகளிர் தொழில் முனைவோர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு TN - RISE திட்டம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ‘ஸ்டார்ட்-அப்’களை மேம்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், “தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனம்” ஒன்றையும், அதற்கான (TN-RISE) இலட்சினையை வெளியிட்டு இணையதளத்தையும், திட்டத்திற்கான அலுவலகத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பெண் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையிலும், அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் வகையிலும் உலக அளவில் புகழ்பெற்ற பிளிப்கார்ட் (Flipkart), எச்.பி (H.P) உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

“விளிம்பிலுள்ள மக்களுக்குகாக திராவிட மாடல் அரசு பார்த்து பார்த்து திட்டங்கள் நிறைவேற்றி வருகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் இந்தியாவிலேயே முதன்முறையாக சுய உதவி குழுக்களை தமிழகத்தில் ஏற்படுத்தினார்கள். இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக லட்சக்கணக்கான பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கை வளர்ந்து மகளிர் சுய உதவி குழு பயிற்சிக்காக திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள மகளிர் தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் நடத்துவோர்‌களில், சுமார் 13.5 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பது பெருமையாக உள்ளது.

மகளிர் தொழில் முனைவோராக விரும்புவோருக்கு a to z என அனைத்து சேவைகளும் வழங்குவது, குறிப்பாக தொழில் தொடங்குவது நிதி மேலாண்மை உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளையும் வழங்குவதற்காக ஏற்படுத்தியது தான் TN - RISE.

“மகளிர் தொழில் முனைவோர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு TN - RISE திட்டம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன்‌ TN - RISE புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு மகளிர் தொழில் முனைவோருக்கு அனைத்து சேவை வழங்கப்படும். இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெற்றிகரமான தொழில் முனைவர்களை உருவாக்கும் முயற்சியில் TN - RISE நிறுவனம் இன்று முதல் அர்ப்பணிப்புடன் செயல்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக தொழில் அதிபர்களும் , முனைவோர்‌ உள்ளார்கள் என்ற வரலாற்று சாதனை இயற்ற அனைவரும் சேர்ந்து உழைப்போம்.

மக்கள் தொகையில், சரி பாதி உள்ள பெண்கள் முன்னேறாமல் நாடு வளர்ச்சி அடையாது. பெண்கள் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அடிமைப்பட்டு உள்ளனர். பண்பாட்டு ரீதியாக பெண்கள் முன்னேற வேண்டும் என்று திமுக அரசு செயல் கொண்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழு மூலம் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேறி உள்ளது.

126 மகளிர் தொழில் முனைவோர்களுக்கும் 80 மகளிர் தொழில் குழு நிறுவனங்களுக்கும் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்திட TN - RISE மூலம் ஆலோசனை வழங்கப்படும்.

ஆண்டுதோறும் 100 மகளிர் தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் தொழில் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பயனடைய உள்ளனர்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories