தமிழ்நாடு

வெளிநாட்டு போன் அழைப்புகள் : இண்டர்போல் உதவியுடன் கொடநாடு வழக்கு விசாரணை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கொடநாடு வழக்கு விவரங்கள் குறித்து பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி பேசினார்.

வெளிநாட்டு போன் அழைப்புகள் : இண்டர்போல் உதவியுடன் கொடநாடு வழக்கு விசாரணை  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது கொடநாடு வழக்கு வழக்கு குறித்த விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் விளக்கினார்.அதில், ”கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories