தமிழ்நாடு

பேரவையில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன் : என்ன அறிவிப்புகள் அது?

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மீதான விவாதத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பேரவையில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன் : என்ன அறிவிப்புகள் அது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மீதான விவாதத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1. தமிழ்நாடு பசுமைத் கரங்கள் திட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டம், பள்ளிக் குழுந்தைகள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் வாழ்விடப் பாதுகாப்பு, அந்நிய தாவர ஆக்கிரமிப்பு அகற்றம், கடற்கரைகளைத் தூய்மைப்படுத்துதல், வன உயிரின கணக்கெடுப்பு, நெகிழிக் கழிவு அகற்றம், கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் அறிவியல் போன்ற பல்வேறு செயல்படுகளில் தன்னார்வத்துடன் ஈடுபத்துவதை குறிக்கோளாக் கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கு ரூ.2024-2025 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.22.35 கோடி நிதியிலிருந்து ரூ.2 கோடி பயன்படுத்தப்படும்.

2. தமிழ்நாடு நாள்தோறும் நலவாழ்வு திட்டம்

தமிழ்நாடு நாள்தோறும் நலவாழ்வு திட்டம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும். காலநிலை மாற்றத்திற்கேற்ற உத்திகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய்கள், பாதிப்புகள் போன்றவை கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.

3.தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டம்

காலநிலை மாற்றத்துக்கு புதுமையான தீர்வுகள் அளிக்கும் 5 சிறந்த குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் துவக்குவதற்கு ஆதார நிதி வழங்கப்படும். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இயக்கத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

4.பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம்

100 பள்ளிகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியிலிருந்து பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம் செயல்படுத்தப்படும்.

5. தமிழ்நாட்டில் உள்ள திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்புகள் செயல்படுத்தப்படும்.

6. சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் ஒலி வரைபட ஆய்வு ரூ.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

7. வாரிய ஆய்வகங்களை காற்று மற்றும் நீர் பகுப்பாய்வுக்கான அதிநவின கையடக்க கருவிகளைக் கொண்டு ரூ.6 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

8. பூண்டி செம்பரம்பாக்கம், உதகமண்டலம், கொடைக்கானல் ஏரிகளின் நிகழ்நேர தரக் கண்காணிப்பு திட்டம் ரூ.5 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

9. கடலோர மாவட்டங்களில் கடற்கரை மாசினை குறைக்க ரூ.100 கோடி செலவில் TN -SHORE திட்டம் செயல்படுத்தப்படும்.

10. அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் ஒரு வாரம் முழுவதும் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

banner

Related Stories

Related Stories