தமிழ்நாடு

வனத்துறை : பேரவையில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மதிவேந்தன்!

வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மதிவேந்தன் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

வனத்துறை : பேரவையில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மதிவேந்தன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மதிவேந்தன் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1. மன்னார் வளைகுடா உயிர்க்கோளம் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்.

2. கோயம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வன உயர்பயிற்சியக மரபியல் பூர்வீக இன விதை பெட்டகம் ரூ,10 கோடியில் நிறுவப்படும்.

3. தமிழ்நாடு மரங்கள் (அரசு நிலங்கள்) பாதுகாப்பு சட்டம் 2024 அறிவிக்கை செய்யப்படும்.

4. தமிழ்நாடு மாநில வனக் கொள்கை 2024 வெளியிடப்படும்.

5. டாக்டர் ஏ.ஜே.டி ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.

6. நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ரூ.1 கோடியில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும்.

7. தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு வருடத்திற்கு ரூ.1 கோடியில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

8. தஞ்சாவூர் கோட்டம், கும்பகோணம் சரகம் அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும்.

9. கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்கள் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்.

10. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன் அத்தடங்களின் அடிப்படையில் வசதிகள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும்.

banner

Related Stories

Related Stories