தமிழ்நாடு

🔴Live || கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் கவன ஈர்ப்பு தீர்மானம் !

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கள்ளர்குறிச்சி மெத்தனால் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

🔴Live || கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் கவன ஈர்ப்பு தீர்மானம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இதை வைத்து அரசியல் பேச விரும்பவில்லை!

“அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் பற்றிய பட்டியல் என் கையில் இருக்கிறது. அதையெல்லாம் வைத்து அரசியல் பேச நான் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்”

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை!

➢ கள்ளச்சாராயம் காய்ச்சிய 4.63 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

➢ 4 லட்சத்து 61 ஆயிரத்து 84 பேர் கைது செய்யப்பட்டனர்.

➢ 565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

➢ 16.51 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளது.

➢ 1.42 லட்சம் எரிசாராயம் அழிக்கப்பட்டுள்ளது.

➢ 28.79 லட்சம் லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டுள்ளது.

➢ மாநிலம் முழுவதும் 45 நிரந்தர மதுவிலக்குச் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, கடத்தல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

* பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்கும்.

* பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.

* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

* பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி !

“கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் வங்கியில் ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வைக்கப்படும். குழந்தைகள் 18 வயதை அடையும் போது வைப்புத்தொகை வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட்டும்”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கல்வி செலவை அரே ஏற்கும் !

கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்க்கல்வி வரையிலான கல்விச்செலவை அரசே ஏற்கும்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஓடி ஒளிபவன் நான் அல்ல!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பேசினார்கள். இந்த பிரச்சனையில் இருந்து ஓடி ஒளிபவன் நான் அல்ல; பொறுப்பை உணர்ந்து எடுத்த நடவடிக்கைகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளை கைது செய்த பின்புதான் பதில் அளித்துக்கொண்டிருக்கிறேன். திறந்த மனதோடு சொல்கின்றேன். இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறோம்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

போதைப் பொருட்களை எந்தவகையிலும் அனுமதிக்க இயலாது! 

எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருட்களை எந்தவகையிலும் அனுமதிக்க இயலாது என்ற அடிப்படையில், இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்து வருகின்றோம்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மெத்தனால் வைத்திருப்பதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் போன்றவற்றைத் தணிக்கை செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!

விஷச்சாராயத்தில் முக்கியமாக மெத்தனால் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தி அலகுகள், பயனர்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் போன்றவற்றைத் தணிக்கை செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

பழனிசாமிக்கும் சேர்த்தே பதில் அளிக்கின்றேன்!

“கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கருத்துக்கூறி, அரசுக்கு ஆலோசனை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி! ’எதிர்க்கட்சி தலைவரும் வெளிநடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்து கருத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் முக்கியமான நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக வெளியே சென்றுவிட்டார். அவருக்கும் சேர்த்தே இந்த அவையில் பதில் அளிக்கின்றேன்!”

- சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கள்ளர்குறிச்சி மெத்தனால் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

    banner

    Related Stories

    Related Stories