தமிழ்நாடு

ஊருக்குள் புகுந்த சிறுத்தை : காரில் மாட்டிக் கொண்ட 5 பேர் - வனத்துறையின் அதிரடி ஆக்சன்!

திருப்பத்தூர் அருகே சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கி இருந்த 5 பேரை 11 மணி நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர்.

ஊருக்குள் புகுந்த சிறுத்தை : காரில் மாட்டிக் கொண்ட 5 பேர் - வனத்துறையின் அதிரடி ஆக்சன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஜெயராமன் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று நடமாடி கொண்டு இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து பீதியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையிடம் இருந்து தப்பித்த சிறுத்தை அருகே இருந்த பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.

அங்கு பள்ளி சுவற்றுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு இருந்த கோபால் என்பவரை தாக்கியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சிறுத்தை மறைவான இடத்தில் பதுங்கிக் கொண்டது.

மேலும் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த தகவலை அடுத்து து மாணவர்களை வகுப்பறையின் உள்ளே வைத்து ஆசிரியர்கள் பூட்டி பாதுகாத்தனர். மேலும் யாரும் வகுப்பறையை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறையினர் மற்றும் போலிஸார் எச்சரித்துக் கொண்டே இருந்தனர்.

பின்ன சிறிது நேரம் கழித்து சிறுத்தை 10 அடி உயர சுற்றுச்சுவரை தாவிகுதித்து அருகே உள்ள கார் நிறுத்தும் பகுதிக்கு சென்றது. உடனே பள்ளியில் இருந்த மாணவர்களை வனத்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர்.

இதனைத் தொடர்ந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். கார் பார்கிங்கில் சிறுத்தை புகுந்த போது, அங்கு இருந்த 5 பேர் காருக்குள் சென்று மறைந்துக் கொண்டனர். பின்னர் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை போலிஸார் பிடித்தனர். பின்னர் காரில் மறைந்திருந்த 5 பேரும் மீட்கப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories