தமிழ்நாடு முழுவதும் தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்த ஆண்டு கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தற்போது தென் பகுதிகளில் அதி கன மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(19.05.2024) மற்றும் நாளை மறுநாள்(20.05.2024) கனமழை அல்லது மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை 24x7 என்ற முறையில் செயல்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து கட்டுப்பாட்டு தொலைபேசி மற்றும் செல்லிடைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.
அலுவலகத்தின் பெயர் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் வருமாறு :
1. மாவட்டஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் - 0451-1077, 0451-2400162, 2400163, 2400164, 2400167
2. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் - 0451-2427304
3. திண்டுக்கல் கிழக்கு, வட்டாட்சியர் அலுவலகம் - 0451-2471305
4. நத்தம், வட்டாட்சியர் அலுவலகம் - 04544-244452
5. நிலக்கோட்டை, வட்டாட்சியர் அலுவலகம் - 9445000581, 04543-233631
6. ஆத்தூர், வட்டாட்சியர் அலுவலகம் - 9384094523
7. பழனி, வட்டாட்சியர் அலுவலகம் - 04545-242266
8. ஒட்டன்சத்திரம், வட்டாட்சியர் அலுவலகம் - 04553-241100
9. வேடசந்தூர், வட்டாட்சியர் அலுவலகம் - 04551-260224
10. குஜிலியம்பாறை, வட்டாட்சியர் அலுவலகம் - 04551-290040
11. கொடைக்கானல், வட்டாட்சியர் அலுவலகம் - 04542-240243
12. திண்டுக்கல் மாநகராட்சி - 9944570076
13. நகராட்சி, பழனி - 7397634377
14. நகராட்சி, ஒட்டன்சத்திரம் - 9842370552
15. நகராட்சி, கொடைக்கானல் - 04542-241253, 8489886639, 9786016606
கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.