தமிழ்நாடு

திண்டுக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திண்டுக்கல், தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படைப் பிரிவு காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படைப் பிரிவு காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :

​திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் இன்று (11.05.2024) பகல் 12.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடியைச் சேர்ந்த ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் திரு.விக்னேஷ்குமார் (Grade-2 PC 260) வயது 32, சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனமும், நான்கு சக்கர சரக்கு வாகனம் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் விக்னேஷ்குமார் சிகச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். ​இவ்விபத்தில் ஆயுதப்படைப் பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் விக்னேஷ்குமார் உயிரிழந்துள்ளது தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

​காவலர் விக்னேஷ்குமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ​பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories