தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!

135 காலி இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு இன்று (நவம்பர் 25) பிற்பகம் 2 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நான்கு சுற்றுகளாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், 6 எம்.பி.பி.எஸ் மற்றும் 28 பி.டி.எஸ் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது. அதேபோல, ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் உயிரிழந்த நிலையில், 7 எம்.பி.பி.எஸ். இடங்களும், 28 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.

மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!

அன்னை மருத்துவ கல்லூரியில் 50 இடங்கள், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான காலி இடங்கள் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்தது.

அவ்வகையில், அந்த 135 காலி இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு இன்று (நவம்பர் 25) பிற்பகம் 2 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.

banner

Related Stories

Related Stories