தமிழ்நாடு

”கல்வி எனும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்”: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”கல்வி எனும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்”: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்களில் 12,616 பள்ளிகளில் நடைபெற்றது. 9.10 லட்சம் மாணவர்களும், 28,827 தனி தேர்வர்களும், 235 சிறை கைதிகளும் என மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் (91.55% ) தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 (94.53%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.96% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் , 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், ”மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories