தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 12.10.2023 அன்று தொடங்கி வைத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதை பாராட்டி The Print ஆங்கில டிஜிட்டல் ஊடகம் பாராட்டியுள்ளது. இதுகுறித்து The Print வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம் பின்வருமாறு :
நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, மற்றும் வாழ்விடங்களைக் கண்டறிதல் மற்றும் அவ்வினம் அழிந்து போகாமல் இருக்க நடவடிக்கைகளை தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கணக்கெடுப்பின் வாயிலாக ஐந்து ஆண்டுத் திட்டம் வேகம் பெற்றுள்ளது. அழிந்துவரும் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளை காப்பாற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் முதல் பணி, அவற்றின் எண்ணிக்கை மற்றும் நடத்தை குறித்து ஒரு கணக்கெடுப்பின் முயற்சி வேகம் எடுத்துள்ளது.
மே 1 ஆம் தேதி முடிவடைந்த இந்த கணக்கெடுப்பு, தென்னிந்தியாவின் பண்டைய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்கைப் பாதுகாப்பதற்காக 2022 இல் தொடங்கப்பட்ட ஐந்தாண்டு நீலகிரி வரையாடு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டமானது வரையாடுகளின் எண்ணிக்கை, அவற்றின் வசிப்பிடப் பகுதிகள் மற்றும் நடத்தை முறை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மார்ச் 21 அன்று நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த முயற்சியின் பல கூறுகள் மூலம் இவ்வினங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இந்த இனங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்பை நடத்துதல், அதன் இயக்க முறையைப் புரிந்துகொள்ள ரேடியோ-காலரிங் மற்றும் அதன் வாழ்விடங்களில் வாழச் செய்தல் ஆகியவையாகும்.
இவ்வினங்களுக்கு ஏற்படும் நோய்களை அறிதல் மற்றும் சிகிச்சை, மேல் பவானியில் பகுதிகளில் அதற்கான புல்வெளி மறுசீரமைப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தி, சுற்றுலாவைச் செயல்படுத்துதல் மற்றும் நீலகிரி வரையாடு வாழ்விடத்திற்கு அருகில் வாழும் பழங்குடி சமூகங்களை உள்ளடக்கிய சமூக மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றையும் கொண்டதாகும்.
ரூ.25.14 கோடி ஒதுக்கப்பட்ட இந்தத் திட்டம், இந்திய வனவிலங்கு நிறுவனம், உலகளாவிய நிதியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. நீலகிரி வரையாடுகளை அழிந்து வரும் இனமாக IUCN வகைப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இவ்வினத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குனோ தேசியப் பூங்காவில் சீட்டா மறு அறிமுகத் திட்டம் (சீட்டா திட்டம்) மற்றும் ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் (எஸ்.டி.ஆர்) புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது உட்பட - எந்தவொரு திட்டமும் ப்ராஜெக்ட் நீலகிரி வரையாடு போன்ற பல நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை.
இந்த முயற்சி உயிரினங்களைப் பாதுகாப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டது மட்டுமன்றி அதன் வாழ்விடத்தையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் புதுப்பிக்கிறது என்று இயற்கைக்கான உலகலாவிய நிதியம் - WWFஇன் விஞ்ஞானி பால் பீட்டர் பிரிடிட் கூறினார். இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த இதுவே சரியான நேரம் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தி பிரிண்டிடம் தெரிவித்தார். இவ்வினத்தை ஐ.யூ.சி.என் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தியுள்ளது.
திட்ட இயக்குநர் எம்.ஜி.கணேசன் கூறுகையில், நிர்வாகக் குழுவில் தானும், ஒரு உதவி இயக்குநர், ஒரு ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் நான்கு மூத்த ஆராய்ச்சியாளர்கள் (எஸ்.ஆர்.எஃப்) உட்பட ஏழு உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் களத்தில் இருந்து பணிகளை ஒருங்கிணைப்பதுடன் மாநிலத்திலுள்ள நான்கு புலிகள் காப்பகங்களான ஆனைமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றிலும் உள்ளனர். இத்திட்ட இயக்குநர் அலுவலகம் கோவையில் உள்ளது என்றார்.
இனங்களின் மறு அறிமுகம் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 3,122 என WWF-India மதிப்பிட்டுள்ளது. ஒரு காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதும் காணப்பட்ட இவ்வினம் தற்போது ஆங்காங்கே துண்டு துண்டான பகுதிகளில் காணப்படுகிறது, அங்கே தற்போது வாழும் பழங்குடி மக்களும் வாழ்விட இழப்பு காரணமாக கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வகை வரையாடுகள் கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2600 மீ உயரத்தில் புல்வெளி வாழ்விடங்களில் வாழ்கிறது. இந்த திட்டத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று, அழிந்துவரும் இவ்வகை இனங்களை அதன் பாரம்பரிய வாழ்விடத்திற்கு மீண்டும் கொண்டுவருவதாகும். பிரெடிட்டின் கூற்றுப்படி, சாத்தியமான வாழ்விடங்களைக் கண்டறிந்த பிறகு, ஆய்வாளர்கள் குழு அழிவுக்கான காரணங்களை ஆராயும், அதைத்தொடர்ந்து வாழ்விட பொருத்தம் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்விடம் உயிரினங்களின் வாழ்வுக்கு உகந்ததா என்பதை மதிப்பிடுவதற்கு தற்போதுள்ள வாழ்விடத்துடன் ஒப்பிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்விடம் முந்தைய வாழ்விடத்துடன் சில தொடர்புகளைக் கொண்டிருக்கவேண்டும், இதனால் எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று பிரிடிட் கூறினார். முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து மூன்று மணி நேரப்பயண தூரத்தில் உள்ள நீலகிரியில் உள்ள கிளன்மார்கன்தான் குழுவால் அடையாளம் காணப்பட்ட அத்தகைய ஒரு இடமாகும்.
எனவே, நீண்ட காலமாக, எங்களிடம் இணைக்கப்பட்ட இவ்வகையான இனங்கள் உள்ளது என்றும் அதனால் சரியான மரபணு ஓட்டம் நடக்கும் என்று பிரிடிட் கூறினார். எதிர்காலத்தில் மனித-விலங்கு மோதலைத் தவிர்ப்பதற்காக விலங்குகளின் வாழ்விடங்களை வைத்திருக்க முடியும் என்பதால் புல்வெளி மறுசீரமைப்பு இதில் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஐ.யூ.சி.என் படி, சிற்றினங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்பது பாதுகாப்பு உட்பட பல நோக்கங்களுக்காக உயிரினங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகும்.
பாதுகாப்பின் காரணமாக இடமாற்றம் செய்வது என்பது உயிரினத்தின் உள்நாட்டு வரம்பிற்குள் அல்லது வெளியே உயிரினத்தை விடுவிப்பது, வரலாற்று (எழுதப்பட்ட அல்லது வாய்மொழி) பதிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட அறியப்பட்ட அல்லது ஊகிக்கப்பட்ட பரவல் அல்லது அவை வாழ்வதற்கான சான்றுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இருப்பினும், இத்தகைய முயற்சி பல அபாயங்களைக் கொண்டுள்ளதுடன் முந்தைய அழிவை ஏற்படுத்திய அச்சுறுத்தல்களைச் சரியாக அடையாளம் காணப்பட்டு அவை அகற்றப்பட்டுள்ளன அல்லது போதுமான அளவு குறைக்கப்பட்டுள்ளன என்பதற்கான வலுவான சான்றுகள் இருக்க வேண்டும் என்று ஐ.யூ.சி.என் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
இடமாற்றம் செய்யப்பட்ட இனங்களின் உயிர்வாழ்வு மற்றும் இயற்கையான இனப்பெருக்கத்தை உறுதி செய்வதைக் கண்காணித்து, பின்னர் அது மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று குழு கூறியது. சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சவால்கள் மறுசீரமைப்புக்குப் பிறகு இவ்வகை உயிரினங்களின் வாழ்விடத்தைச் சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனுமதிக்க அரசு பரிசீலித்து வருகிறது, மேலும் அதற்காக கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் மேகமலை ஆகிய மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுற்றுலா உயிரினங்களின் இயற்கை வாழ்க்கை நிலைமைகளை பாதிக்காது என்றும், இந்த வாழ்விடத்தில் பழங்குடி சமூகங்களை ஈடுபடுத்தி கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் மூலம் சமூக அக்கறையுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் திட்ட இயக்குநர் கணேசன் கூறினார்.
இருப்பினும், இப்பணியில் சவால்கள் இல்லாமல் இல்லை. ஒரு பெரிய நிலப்பரப்பை உள்ளடக்குவதுதுடன், நீலகிரி வரையாடுகள் பெரும்பாலும் துண்டு துண்டான வாழ்விடங்களில் பாறைகளில் காணப்படுவதால் தனிப்பட்ட இனங்களை அடையாளம் காணும் குழு பெரும்பாலும் மலையேற்றமும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கணேசன் கூறினார். குறைந்து வரும் புல்வெளிப் பரப்புகள், திடீரென்று பரவும் காட்டுத் தீயும் உயிரினங்களின் வாழ்விற்கு பெரும் சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.