சவுக்கு மீடியா என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வருபவர் சங்கர். இந்த பக்கத்தில் இவர் அரசியல் கட்சித் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அண்மையில் பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். இதையடுத்து கோவை சைபர் க்ரைம் போலிஸார் சங்கர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இன்று தேனியிலிருந்த சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலிஸார் கைது செய்தனர். மேலும் சங்கர் மீது 294(b), 509, 353 உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை சைபர் கிரைம் போலிசாரால் தேனியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சங்கர் கோவை அழைத்துச் செல்லப்படுகிறார்.