தமிழ்நாடு

குடும்பத்தினருக்காக அரசாணை வெளியிட்டாரா EPS? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குடும்பத்தினருக்காக அரசாணை வெளியிட்டாரா EPS? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக  உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் துவங்கப்பட்டது. இந்த சங்கத்தில் மேட்டூர் இடதுகரை பாசன கால்வாய் ஆயக்கட்டுதாரர்களான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சேலம், வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், காவிரியில் நீர் எடுக்க 5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையில், சங்கத்தில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 27 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்த சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டது எனவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருக்காக அரசாணை வெளியிட்டாரா EPS? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக  உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மேலும், எவ்வளவு தண்ணீர் காவிரியில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை அளவிட எந்த மீட்டரும் இல்லாமல், தொடர்ச்சியாக தண்ணீர் எடுக்கப்பட்டுப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக 2023ம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதோடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories