தமிழ்நாடு

தமிழ்நாட்டில் Jaguar Land Rover கார் உற்பத்தி ஆலை : ரூ.9000 கோடி முதலீடு செய்கிறது Tata Motors!

உலகின் தலைசிறந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் மின்சார கார்களை தமிழ்நாட்டில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் Jaguar Land Rover கார் உற்பத்தி ஆலை :  ரூ.9000 கோடி முதலீடு செய்கிறது Tata Motors!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அண்மையில், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், கார் உற்பத்தி ஆலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆலையில், உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் மின்சார காரை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்கவும், படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் தயாரிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து, சீனா, பிரேசில், ஸ்லோவாக்கிய போன்ற நாடுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories