தமிழ்நாடு

‘ஜி Pay’: QR Code-ஐ Scan செய்தால் ஒளிபரப்பாகும் மோடியின் ஊழல் - தமிழ்நாடு முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

QR Code-ஐ Scan செய்தால், மோடியின் ஊழல் குறித்த செய்தி வீடியோ காட்சியாக ஒளிபரப்பு செய்யப்படுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஜி Pay’: QR Code-ஐ Scan செய்தால் ஒளிபரப்பாகும் மோடியின் ஊழல் - தமிழ்நாடு முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டு காலமாக பல வித ஊழல்களை அரங்கேற்றியுள்ளது பாஜக. போலியான வாக்குறுதிகளோடு சேர்த்து, அதானி, அம்பானி போன்றவர்களுக்கு கடன்கள் தள்ளுபடி, தேர்தல் பத்திர ஊழல், பிரதமர் மோடி நிதி என பல விதங்களில் பாஜக நூதன முரையில் மோசடி செய்துள்ளது. இந்த சூழலில் பாஜகவின் வண்டவாளத்தை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டி வருகிறது எதிர்க்கட்சிகள்.

‘ஜி Pay’: QR Code-ஐ Scan செய்தால் ஒளிபரப்பாகும் மோடியின் ஊழல் - தமிழ்நாடு முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

இதையடுத்து மக்களும் பாஜகவின் ஊழல், ஏமாற்று வேலையை புரிந்துகொண்டு விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், மோடியின் ஊழலை மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக QR Code மூலம் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதனை Scan செய்தால், மோடியின் ஊழல் குறித்த செய்தி வீடியோ காட்சியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அந்த காட்சியில் பாஜக ஆட்சியில் அரங்கேறிய CAG அறிக்கை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்ச கோடி தள்ளுபடி, சுங்கச்சாவடிகளில் விதிகளை மீறி வசூல், துவராகா சாலை கட்டுமான ஊழல், தேர்தல் பத்திர ஊழல் உள்ளிட்ட பலவையும் ஆடியோ மூலம், ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories