தமிழ்நாடு

"தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கும் பாஜக" - கலாநிதி வீராசாமி எம்.பி விமர்சனம் !

தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கும் அண்ணாமலைக்கு கச்சத்தீவு பற்றிய வரலாறு தெரியுமா என கலாநிதி வீராசாமி எம்.பி விமர்சித்துள்ளார்.

"தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கும் பாஜக" - கலாநிதி வீராசாமி எம்.பி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திமுகவின் வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அயனாவரத்தில் அமைச்சர் பி.கே சேகர்பாபு பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக பிருந்தா திரையரங்கம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் வேறு எந்த வகையிலும் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தால் பாஜக கச்சத்தீவை தேர்தல் நேரத்தில் கையில் எடுத்துள்ளனர்.

கடந்த பத்து வருட ஆட்சிக்காலத்தில் தமிழர் நலனுக்காக துரும்பையும் கிள்ளி போடாத பாஜக ஆட்சியாளர்கள் இன்றைக்கு தேர்தலுக்காக கச்சத் தீவு விவகாரம் பற்றி பேசுகின்றனர். இதற்கெல்லாம் எங்கள் முதல்வர் சரியான விளக்கத்தை அளிப்பார்.

கச்சத்தீவு பிரச்சனைக்காக எத்தனை முறை சட்ட மன்றத்தில் பேசியுள்ளோம், எத்தனை முறை களத்தில் நின்றுள்ளோம். இந்த வரலாறு எல்லாம் அண்ணாமலைக்கு தெரியுமா? 20 ஆயிரம் புத்தகம் படித்த அறிவு ஜீவி அண்ணாமலைதான் இந்த ஐடியாவை சொல்லி இருப்பார். எனவே கச்சத்தீவு பிரச்சினையை பாஜகவினர் தற்போது கையில் எடுத்து உள்ளனர்" என்று கூறினார்.

"தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கும் பாஜக" - கலாநிதி வீராசாமி எம்.பி விமர்சனம் !

பின்னர் கூட்டணி கட்சியினருக்கு சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடந்து கொண்ட விதம் தொடர்பான செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்," தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சியினரின் ஒரு காலை கட்டி விட்டு பிஜேபியுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓட சொல்கின்றனர். அந்த ஒரு காலை வைத்துக் கொண்டே நாங்கள் பெரும் வெற்றியை பெறுவோம்"

தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்சமான செயல்பாடுகளையெல்லாம் தோற்கடிப்போம். வட சென்னையில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவு இருப்பதால் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories