தமிழ்நாடு

”அண்ணாமலை என்றாலே குளறுபடி” : வெளுத்து வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

ஒவ்வொரு நாளும் குளறுபடிகளை செய்வதையே அண்ணாமலை வேலையாக வைத்துள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.

”அண்ணாமலை என்றாலே குளறுபடி” : வெளுத்து வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. மயிலாடுதுறை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்துச் சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைதான் வீசுகிறது. 40 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

தேர்தல் தோல்வி பயத்தால் எதிர்க்கட்சி சின்னங்களை முடக்கப்பார்க்கிறார்கள். எங்களது கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்தாலும் அவர்களது வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுப செய்வதையே வேலையாக வைத்துக் கொண்டுள்ளார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூட பல குளறுபடிகள் இருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அவரது வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளது. கோவை தொகுதியில் தி.மு.கதான் அமோக வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories