கோவை மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை பந்தயச்சாலை பகுதியிலிருந்து மிகப்பிரம்மாண்ட பேரணியாக வந்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் உடனிருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "திரணியில் உள்ள சில பேர் சொல்வதை மக்கள் காது கொடுத்து கேட்பதில்லை, என பதில் அளித்தார். ஆட்டு குட்டியை கையில் எடுத்து இருக்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதை நான் கையில் எடுக்கவில்லை, சமைக்க தானே போகிறேன் என பதிலளித்தார். ஈசல் போன்றவர் என அண்ணாமலை விமர்சனத்திற்கு பதில் அளித்த டிஆர்பி ராஜா, மகிழ்ச்சி எனவும்
அண்ணாமலைக்கு என்னை பார்த்தால் ஏன் அவ்வளவு எரிகிறது, மக்களை பார்த்தாலே எரிகிறது, ஏன் என தெரியவில்லை, இது போன்று இருக்க வேண்டாம். தேசிய கட்சியைச் சார்ந்த சிலர், கொச்சையான அரசியலை தமிழகத்திற்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து பேசுவது அவசியமற்றது என நினைக்கிறேன்.
இந்த அற்புதமான தமிழ்நாடு செழித்தோங்க வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஜனநாயகத்தை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. தேர்தல் காலங்களில் எதிரணியினர் மாற்றி மாற்றி சூடு பறக்கும். அதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக அதன் தரத்தை மீண்டும் மீண்டும் குறைத்து கொண்டே இருக்க கூடாது என எதிர் அணியினரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுகவினர் சரியாகவே நடந்து கொள்கிறார்கள், பெரிய இயக்கத்தில் இருந்து வந்து கொண்டு கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.அது அந்தக் கட்சியினருக்கே பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழகம் ஜனநாயகம் மற்றும் நாகரீத்துக்கு பெயர் போன அரசியலுக்கான ஒரு மாநிலமாக திகழ்கிறது. இந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடுபவர்கள், இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள்.
இந்த இனமும், இந்த நாடும் முன்னேற கூடாது, அழிய வேண்டும் என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள் எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது. கீழ்த்தரமான அரசியலை விட்டுவிட்டு, வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறார்கள் என அவர்கள் இப்போது கூறினாலும் அது எடுபடாது. , காரணம் பத்து ஆண்டுகள் அவர்கள் இருந்து ஒன்றையும் கிழிக்க வில்லை எதையும் செய்யவில்லை. அனைத்தையும் இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் தான் இன்று தமிழ்நாடு செழித்தோங்கி பளபளவென மின்னி இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
மாநிலத்திலும் சரி ஒன்றியத்திலும் சரி இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை வந்திருக்கிறது. மகத்தான வளர்ச்சி கோவைக்கு காத்திருக்கிறது. கோவைக்கு எவ்வளவு மகத்தான வளர்ச்சி வரப்போகிறது என்பதை இன்னும் ஆரே மாதங்களில் பார்க்கப் போகிறீர்கள். ஏற்கனவே மூன்று வருடங்களில் எக்கச்சக்க வளர்ச்சியை கோவைக்கு கொடுத்து விட்டார்கள் முதல்வர்.
கோவையை பொருத்தவரை மெட்ரோ ரயில் திட்டம், டெக்ஸ் சிட்டி மற்றும் விமான நிலைய விரிவாக்கம் அனைத்தையும் செய்தது திமுக தான். விமான நிலையத்துக்கு அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் விமான நிலைய விரிவாக்க பணிகள் பணிகளும் நடைபெறும். மகத்தான வளர்ச்சி கோவைக்கு இருக்கிறது" என தெரிவித்தார்.