சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைக்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரத்த தானம் முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சென்னையில் மிகப்பெரிய அளவிலான மருத்துவச்சேவை செய்து வருகிறது. இதுவரையில் புறநோயாளிகளாக 1லட்சத்து 31ஆயிரத்து610 பேர் உள்ளர். நோயாளிகள் 23ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
இங்கு 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. அதில் 1057அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இரத்த பரிசோதனைகளுக்கு 4லட்சத்து 15ஆயிரத்து 650 பேர், சி.டி.ஸ்கேன் 4015 பேர், எம் ஆர்.ஐ. 1345 பேர், எண்டோஸ்கோபி 1096 பேருக்கு எடுக்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை 3524 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் 640 இரத்த பரிசோதனைகளை ஒரே நேரத்தில் செய்யும் கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் இன்று நடைபெறுகிறதுநான் இரத்ததான முகாமில் இரத்ததானம் செய்துள்ளேன். இது என் வாழ் நாளில் 65-வது இரத்த தானமாகும்
இன்று8.60கோடி செலவில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மாரடைப்பிற்கான காரணங்களை கண்டறிவது சிகிச்சை அளிப்பது தொடர்பான கருவி தென்னிந்தியாவில் முதன்முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது" என்று கூறினார்.