தமிழ்நாடு

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் மெய்யநாதன் !

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் மெய்யநாதன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 51.7% உயர்கல்வி பெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்வி மட்டும் தான் சமத்துவத்தை ஏற்படுத்தும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி - நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் திராவிட முதல்வரின் சொந்தங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலைமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து 250 நபர்களுக்கு அரிசி,பருப்பு, தலா ஆயிரம் ரூபாய் அடங்கிய நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யாநாதன் உரையாற்றினார்.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் மெய்யநாதன் !

அப்போது பேசிய அவர், "சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில் அளிக்கும் பொழுது வியந்து பார்ப்போம். எந்த செயலையும் செய்வோம் என முடிவெடுத்தால், அதை முடித்து விட்டு தான் அடுத்த வேலை செய்வார். தமிழ்நாடு முதலமைச்சராக தளபதி பொறுப்பேற்ற போது 5.லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தது.அதிமுக ஆட்சியில் காலியாக இருந்த கஜானாவை திறம்பட கையாண்டார் முதலமைச்சர்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 51.7% உயர்கல்வி பெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்வி மட்டும் தான் சமத்துவத்தை ஏற்படுத்தும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. தமிழ் புதல்வன் திட்டம் மகத்தான திட்டம். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சென்னை மறு கட்டமைப்பு பெறுகிறது.

அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்தது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பயணிக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான் இந்தியாவை காப்பாற்றுவார் என அனைவரும் நினைக்கின்றனர். 40க்கு40 வெற்றி என்ற வரலாற்று சாதனையை முதலமைச்சருக்கு பெற்று தருவோம்" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories