தமிழ்நாடு

சட்டப்பேரவையில் கலைஞர் பேருந்து நிலையம் குறித்த கேள்வி... அடுத்தடுத்து பதிலடி தந்த அமைச்சர் சிவசங்கர் !

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சீராகும் சிறப்பாகும் முழுமையாக செயல்படுத்தியது திராவிட மாடல் ஆட்சி தான் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் கலைஞர் பேருந்து நிலையம் குறித்த கேள்வி... அடுத்தடுத்து பதிலடி தந்த அமைச்சர் சிவசங்கர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் நேற்று (12.02.2024) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பேரவையில் சற்று சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஆளுநர் மீதான விவாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது நாளான ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று அதன் மீதான விவாதம் தொடங்கியது.

அப்போது கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் குறித்த விவாதம் நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து அவரது கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது :

“கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக கிளம்பாக்கம் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி காலத்தில். ஆனால் அதை பாதையில் விடும் எண்ணம் எப்போதுமே திராவிட மாடல் ஆட்சிக்கு இல்லை. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

சட்டப்பேரவையில் கலைஞர் பேருந்து நிலையம் குறித்த கேள்வி... அடுத்தடுத்து பதிலடி தந்த அமைச்சர் சிவசங்கர் !

கிளாம்பாக்கம் பேருந்தில் பயணிப்பவர்கள் யாரும் பிரச்சினை எழுப்புவதில்லை. ஆனால் சிலர் அந்த பிரச்சினையை எழுப்பி வருகிறார்கள். தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

100%-ல் 80% பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இயக்கப்படுகிறது. குறிப்பாக வட சென்னையில் இருப்பவர்கள் கிளாம்பாக்கம் செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதாலே 20% பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இல்லை, அடிப்படைவசதிகள் இல்லை என்று சொல்வது தவறான செய்தி.

தற்போது முழுமையாக கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு மாற்றப்படும்போது இதே பிரச்சினைதான் இருந்தது. ஆனால் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக அதிகமாக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சந்தேகம் இருந்தால், நானும் அமைச்சர் சேகர்பாபுவும் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டுகிறோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories