தமிழ்நாடு

”வரலாறு காணாத வளர்ச்சியை பெற்று வரும் தமிழ்நாட்டின் தொழில்துறை” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!

தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாறு காணாத வளர்ச்சியை பெற்று வருகிறது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

”வரலாறு காணாத வளர்ச்சியை பெற்று வரும் தமிழ்நாட்டின் தொழில்துறை” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6.66 லட்சம் கோடி அளவிற்குத் தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக UAE, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்த்தார். தற்போது ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ளார். தொழில்துறையில் வரலாறு காணாத மிகப்பெரிய வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டுவருகிறது.

ஸ்பெயின் பயணத்தில் ரூ.3440 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்குக் குறிப்பாக நான் முதல்வன் திட்டம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த மிக சிறப்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. புரிந்துணர்வு மேற்கொண்ட பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களது நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் தொடங்கி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories