2008 ஆம் ஆண்டு உறுப்பு தானம் திட்டம் கலைஞர் ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. அதிலிருந்து 1,706 நன்கொடையாளர்களிடம் இருந்து 6,249 முக்கிய உறுப்புகளை அரசு மீட்டெடுத்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் உறுப்பு கொடை வழங்கியவர்களின் எண்ணிக்கை 313. மேலும் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில விருதைத் தமிழ்நாடு பெற்றுள்ளது.
தொடர்ந்து தி.மு.க அரசு உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதனின் ஒருவெளிப்பாடுதான் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 29 நாட்களில் 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாகத் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷணன், "“நாங்கள் 29 நாட்களில் 30 நன்கொடைகளைப் பெற்றுள்ளோம்; ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒன்று வீதம் நன்கொடைகள் பெறபட்டுள்ளது. பல்நோக்கு அணுகுமுறை இதை சாத்தியமாக்கியுள்ளது.
மாநிலத்தின் இறந்த நன்கொடையாளர் திட்டத்தின் தனித்தன்மை என்னவென்றால், இது ஒரு நகரத்தை மையமாகக் கொண்டிருக்கவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்புடன் மாநிலம் முழுவதும் பரவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.