தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாவட்டங்களுக்கான பேருந்துகள் எந்த மேடையில் நிற்கும் என்ற பயணிகளுக்கான வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையமான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச.30 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலையைத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிட அறைகள், தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் / துரித உணவு மையம் மற்றும் முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் / துரித உணவு மையம், ஏடிஎம் வசதி, தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவ மையம், போக்குவரத்து அலுவலகம், நேரக் குறிப்பாளர் அலுவலகம், ஆண்கள், பெண்கள், மற்றும் திருநங்கைகளுக்கான கழிவறைகள், குடிநீர் வசதி, மின்விசிறிகள், இருக்கைகள், சூழல் வரைபடங்கள் வசதியுடன் பேருந்து நிறுத்துமிட அமைப்பு போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இம்முனையத்தில் பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் (Dormitory) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 2 நகரும் படிக்கட்டுக்கள் (Escalators), பயணிகளுக்கான 8 மின்தூக்கிகள் (Lifts) மற்றும் 2 சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான மின்தூக்கிகள் (Service Lifts) அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் உள்ள பேருந்துகளுக்கான நடைமேடைகளில் உந்த எந்த ஊர் பேருந்துகள் எங்கு நிற்கும் என்ற பயணிகளுக்கான வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் கீழே உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்? : உங்களுக்கான முழு விவரம் இதோ!

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இன்றில் இருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பயணிகளின் உதவிக்காக இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா உதவி எண் 149, CMDA உதவி எண் -7845700557 /7845727920, CMDA உதவி எண் - 7845740924 / 7845764945

banner

Related Stories

Related Stories