தமிழ்நாடு

உங்களுக்கு Youtube சேனல் உருவாக்க ஆசையா?: 3 நாள் பயிற்சி முகாம் நடந்தும் தமிழ்நாடு அரசு - முழு தகவல் இதோ!

சென்னையில் Youtube சேனல் உருவாக்குவது குறித்து மூன்று நாள் பயிற்சி முகாமை தமிழ்நாடு அரசு நடத்துகிறது.

உங்களுக்கு Youtube சேனல் உருவாக்க ஆசையா?: 3 நாள் பயிற்சி முகாம் நடந்தும் தமிழ்நாடு அரசு - முழு தகவல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செல்போன் வைத்திருக்கும் எல்லோரும் தங்களுக்கு என்று தனி Youtube சேனல் நடத்து சம்பாதிக்கும் சூழ்நிலை இன்று உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் தான் இதில் அதிகமா Youtube சேனல்களை நடத்தி வருகிறார்கள். இது பொருளாதார ரீதியாக இளைஞர்களுக்கு அதிகம் கைக்கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசும் Youtube சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த 3 நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 09.01.2024 முதல் 11.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

உங்களுக்கு Youtube சேனல் உருவாக்க ஆசையா?: 3 நாள் பயிற்சி முகாம் நடந்தும் தமிழ்நாடு அரசு - முழு தகவல் இதோ!

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - டொமைன் பெயர் & ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 44-22252081/22252082, 8668102600 / 86681 00181.

banner

Related Stories

Related Stories