தமிழ்நாடு

சுனாமி வந்த பிறகுதான் இந்த சட்டமே வந்தது : நிர்மலா சீதாராமனுக்கு பாடம் எடுத்த பூவுலகு சுந்தரராஜன்!

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு பூபுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் கண்டித்துள்ளார்.

சுனாமி வந்த பிறகுதான் இந்த சட்டமே வந்தது : நிர்மலா சீதாராமனுக்கு பாடம் எடுத்த பூவுலகு சுந்தரராஜன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும், இது முடிந்த சில நாட்களிலேயே திருநெல்வேலி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் பெய்த கனமழையாலும் மக்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 100 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

இப்படி அடுத்தடுத்த இரண்டு பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது. உடனே மக்களை மீட்க அமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கிடையில் மிக்ஜாம் புய கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு, 90% மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் டிச.19ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து 2 பேரிடர்களைத் தேசிய பேரிடராக அறிவித்து தமிழ்நாட்டிற்கு உடனே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றும் சுனாமி வந்தபோது கூட தேசிய பேரிடர் அறிவிக்கப்படவில்லை என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குத் தமிழ்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த பம்மாத்து வேலையெல்லாம் இங்க வேண்டாம் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், இந்தியாவின் பேரிடர் மேலாண்மை சட்டம், சுனாமி வந்து ஒரு வருடம் கழித்துத்தான் இயற்றப்பட்டது, அப்போதுதான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது, பேரிடர் மேலாண்மை என்கிற வார்த்தையை கற்றுக் கொடுத்ததே சுனாமிதான். அதனால் சுனாமியைக் கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்கிற பம்மாத்து எல்லாம் வேண்டாம்.

தமிழ்நாடு கேட்பது இதுதான், “வழக்கமாக SDRFக்கு கொடுக்கவேண்டிய நிதி இல்லாமல், நாங்கள் பேரிடருக்கும் கேட்கும் தொகையை அல்லது அதில் ஒரு பாதியாவது கொடுங்கள்” என்பதுதான். இதை ஒன்றும் யாசகமாக கேட்கவில்லை, இந்திய ஒன்றியத்திற்கு மிக அதிகமாக வரியைக் கொடுக்கும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது என்கிற உரிமையில்தான் கேட்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories