தமிழ்நாடு

மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும் தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறையில்  இந்தியாவிற்கே முன்மாதிரியாக  இருக்கும் தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி & கேன்சர் கேர் (Sringeri Sharada Equitas Hospital Multispecialty & Cancer Care) மருத்துவமனையை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 1829 மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எழும்பு மஞ்சை அறுவை சிகிச்சைக்கு ரூ. 17 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்குச் சேவை செய்வதற்காக இம்மருத்துவமனையில் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் (Surgical Oncology), மருத்துவப் புற்றுநோயியல் (Medical Oncology), கதிர்வீச்சு புற்றுநோயியல் (Radiation Oncology), நோயெதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy), குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

banner

Related Stories

Related Stories