தமிழ்நாடு

மழைக் காலம் - மக்களே உஷார்.. பள்ளி சிறுவன் ஷூவுக்குள் ஒளிந்திருந்த நாகப் பாம்பு!

கோவையில் பள்ளிச் சிறுவன் ஷூவுக்குள் இருந்து சிறிய நாகப்பாம்பு ஒன்று எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மழைக் காலம் - மக்களே உஷார்..  பள்ளி சிறுவன் ஷூவுக்குள் ஒளிந்திருந்த நாகப் பாம்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம், பெள்ளலூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் பிரதீப் தனது ஷூவுக்களை வீட்டிற்கு வெளியே விட்டுச் சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த ஷூவுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

இதனால் வீட்டிலிருந்தவர்கள் ஷூவுக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தபோது, அதில் சிறிய பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் மோகன் என்பவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த மோகன், ஷூவுக்குள் இருந்த பாம்பை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் வீட்டிற்குள் பாம்புகள் எளிதில் நுழைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டில் எந்த பொருட்களைப் பயன்படுத்தும் போதும் ஒருமுறைக்கு இரண்டுமுறை நன்றாகச் சோதனை செய்த பிறகு பயன்படுத்த வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories