தமிழ்நாடு

வங்கியிலிருந்து வந்த மெசேஜ்.. பதறியடித்து வங்கிக்கு ஓடிவந்த வாடிக்கையாளர் : தஞ்சாவூரில் நடந்தது என்ன?

தஞ்சாவூரில் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர் கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக மெசேஜ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கியிலிருந்து வந்த மெசேஜ்.. பதறியடித்து வங்கிக்கு ஓடிவந்த வாடிக்கையாளர் : தஞ்சாவூரில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணசேன். இவர் கோட்டாக் மஹிந்திரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் இவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1000த்தை நண்பர் ஒருவருக்குப் பணப் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார்.

பின்னர் அவருக்கு உங்களது வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே பதறியடித்து வங்கிக்குச் சென்றுள்ளார். இது குறித்து வங்கி மேலாளரிடம் கூறியுள்ளார். நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு அவரை வங்கியிலிருந்து அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் மீண்டும் அவரது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது சேமிப்பு இருப்புத் தொகை மட்டுமே காட்டியுள்ளது.

தொடர்ச்சியாகவே வாடிக்கையாளர்களது வங்கிக் கணக்கில் தவறுதலாகப் பணம் இப்படி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட சென்னையில் வாடிக்கையாளர் ஒருவருக்குத் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தவறுதலாக ரூ.9000 கோடி டெபாசிட் செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த வங்கியின் முக்கிய அதிகாரி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories